என் மலர்
செய்திகள்

காதலர்தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும் - அனைத்து பள்ளிகளுக்கும் ராஜஸ்தான் அரசு உத்தரவு
ஜெய்ப்பூர்:
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று காதலை போற்றும் வகையில் காதலர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்.
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் காதலர் தின கொண்டாட்டம் வேறு உருவம் பெறுகிறது. அதாவது அன்றைய தினத்தை பெற்றோர் தினமாக கொண்டாட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அது குறித்து கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அடுத்த ஆண்டு (2019) முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏப்ரல் 14-ந் தேதி பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும்.
அன்றைய தினம் தாய் மற்றும் தந்தைக்கு மாணவ, மாணவிகள் பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தில் ‘டீன் ஏஜ்’ பருவத்தினர் தீவிரமாக உள்ளனர். இதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். அவர்களை மகளோ அல்லது மகனோ கவுரவிப்பார்கள்.
அன்றைய தினம் பெற்றோர்கள் பள்ளியில் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம். ஆசிரியர்களை சந்தித்து தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் நடத்தைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
ராஜஸ்தான் மாநில கல்வி மந்திரி வாசுதியோ தேவ்னானி சமீபத்தில் இது குறித்து கலாசாரம் மற்றும் நல்லொழுக்கங்கள் மற்றும் பெற்றோரின் மீதான அன்பை குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் மனதில் பதிய வைக்க முடியும். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரிடம் அன்பு செலுத்துவதையும், மரியாதை கொடுப்பதையும் கற்றுக் கொள்ள முடியும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இது ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்றார். #ValentineDay #Educationdepartment