என் மலர்

  செய்திகள்

  மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று ஜப்பான் சென்றார்
  X

  மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று ஜப்பான் சென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரியின் அழைப்பை ஏற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று டோக்கியோ சென்றார். #SushmaSwaraj #JapanVisit
  புதுடெல்லி:

  இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி, நிதிச்சந்தை ஆகிய துறைகளில் ஜப்பான் அரசு ஏராளமாக முதலீடு செய்துள்ளது.
  கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறை தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

  பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தபோது இந்த உறவுகள் மேலும் பலம் அடைந்தது.

  இந்நிலையில், இந்தியா - ஜப்பான் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டாரா கோனோ அழைப்பு விடுத்திருந்தார்.

  இந்த அழைப்பை ஏற்று மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக சுஷ்மா சுவராஜ் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக இருநாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் வெகு விரிவாக விவாதிக்கவுள்ளனர். #SushmaSwaraj #JapanVisit #tamilnews
  Next Story
  ×