search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.டி.பி. 7.5 சதவீதமாக உயரும்: நிதி மந்திரி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
    X

    ஜி.டி.பி. 7.5 சதவீதமாக உயரும்: நிதி மந்திரி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

    நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.) 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை இருக்கும் என நிதி மந்திரி தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BudgetSession #EconomicSurvey2018 #GDPgrowth
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டதுடன், பல்வேறு துறைகளில் அரசு சாதனை படைத்திருப்பதாகவும் கூறினார்.

    ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து, 2017-18ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில்  நிதி மந்திரி அருண் ஜெட்லி  தாக்கல் செய்தார். பிப்ரவரி 1-ம் தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், வரி வசூல், சேவைத் துறை  மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (ஜி.டி.பி.) 7 சதவிதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பது பெரிய பிரச்சினை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ‘அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. வேலைவாய்ப்புக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றும்  அதில் கூறப்பட்டுள்ளது. #BudgetSession #EconomicSurvey2018 #GDPgrowth #tamilnews
    Next Story
    ×