என் மலர்
செய்திகள்

காதலுக்கு தூது போனதால் இளம் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் காதலுக்கு உதவி செய்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராட்டியம் மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சக்லம்பா கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது சகோதரருக்கும் பக்கத்து கிராமத்து சிறுமிக்கும் இடையே காதல் தூதுவராக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமி வீட்டார் தனது மகளின் காதலுக்கு உதவிய இளம் பெண்ணையும் அவரது கணவரையும் ஊரில் உள்ள அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர். அவர்களும் மன்னிப்பு கேட்டனர்.
பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அப்பெண்ணின் கணவர் வெளியே சென்ற பிறகு இரண்டு குடும்பத்தையும் சேர்ந்த 8 பேர் அவர் வீட்டிற்குள் புகுந்தனர். தனியாக இருந்த பெண்ணை மிரட்டி, செருப்பால் அடித்தனர். மேலும் வெளியே இழுத்துச் சென்று நிர்வாணமாக கிராமத்தை சுற்றி நடக்க விட்டனர்.
இக்கொடூர சம்பவத்தை அடுத்து கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சக்லம்பா காவல் நிலைய தலைமைக் காவலர் கூறினார்.
காதலுக்கு உதவி செய்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக நடக்க வைத்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story