என் மலர்
செய்திகள்

செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்: ஆய்வறிக்கையில் தகவல்
செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என கார்னிஜி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா:
செல்பி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என கார்னிஜி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கார்னிஜி மெல்லோன் பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, செல்பி மோகத்தினால் இறப்போர் பற்றி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2014-2016 ஆம் ஆண்டில் நடந்த செல்பி மரணத்தை ஆராய்ந்ததில், 127 மரணங்களில் 76 பேர் இந்தியாவில் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி மும்பை துணை கமிஷனர் பரம்ஜித் தஹியா கூறுகையில் "இளைஞர்கள் செல்பி எடுக்கும் நோக்கத்தில் உயிரைப்பற்றி கவலைப் படுவதில்லை. அவர்களின் உயிரை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், எனினும் அவர்கள் யார் பேச்சையும் மதிப்பதில்லை" என தெரிவித்தார்.
செல்பி எடுப்பதின் முக்கிய காரணம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் அதிக லைக் பெற எண்ணுகின்றனர். லைக் வாங்குவதை விட உயிர் முக்கியம் என்பது அத்தருணத்தில் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களை ட்விட்டர் வழியாகவும் செல்பி மோகத்தின் ஆபத்துகள் குறித்து விளக்கி வருகிறோம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
Next Story






