என் மலர்

  செய்திகள்

  பா.ஜ.க.வினர் மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக பணி செய்த உ.பி. பெண் போலீஸ் இடமாற்றம்
  X

  பா.ஜ.க.வினர் மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக பணி செய்த உ.பி. பெண் போலீஸ் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல், துணிச்சலாக தனது பணியை செய்த பெண் போலீஸ் அதிகாரியை அம்மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது.
  லக்னோ:

  உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஹெல்மட் அணியாமல் வந்த நபரை, அந்த பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரேஸ்தா தாக்கூர், நிறுத்தியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ப்ரமோத் குமார் என்பவர், தான் பாஜக-வைச் சேர்ந்தவன் என்றும், வாகனங்களை நிறுத்த காவல்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். 

  அப்போது, ப்ரமோத் குமாருக்கு ஆதரவாக சில பா.ஜ.க.வினருக்கு வந்துள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினருடன் போலீஸ் அதிகாரி தாக்கூர் துணிச்சலாக நின்று பேசினார். பா.ஜ.க.வினரை அவர் துணிச்சலாக நின்று எதிர் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

  இந்நிலையில், பா.ஜ.க.வினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல், துணிச்சலாக தனது பணியை செய்த பெண் போலீஸ் அதிகாரி தாக்கூரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 234 அதிகாரிகளின் பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. 

  இது குறித்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தாக்கூர் கூறுகையில், ”என்னுடைய இடமாற்றம் வழக்கமானது அல்லது அரசியல் என்று எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவெனில், என்னுடைய சக பேஜ் அதிகாரிகள் யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

  இது குறித்து புலந்த்சாகர் நகர பா.ஜ.க. தலைவர் ஹிமன்சு மிட்டல் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளிடம் நாங்கள் புகார் செய்தோம். மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த போலீஸ் அதிகாரிக்கு தெரியவில்லை என்று எங்கள் மூத்த தலைவர்களிடம் தெரிவித்தோம். அந்த பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது அனைவருக்கும் நல்லது” என்றார்.
  Next Story
  ×