என் மலர்

  செய்திகள்

  அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
  X

  அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது அமைச்சர்கள் அனைவரும் சொத்துப் பட்டியலை வெளியிடும்படி கூறியுள்ளார்.
  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

  சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்களுக்கு சீல் வைத்தல், மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார நிலை குறித்து சோதனை, பெண்களுக்கு எந்தஒரு தொல்லையும் ஏற்பட்டுவிடாத வண்ணம் போலீஸ் கண்காணிப்பு, அரசு அலுவலங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பான் - மசாலா பயன்படுத்த தடை, அனைத்து துறைகளும் மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்தல், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிகளில் டி-சர்ட் அணிய கூடாது. பள்ளியில் தேவையில்லாமல் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது, கிரிமினல் பின்னணி கொண்ட ஒப்பந்ததார்களை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 


  இப்போது அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். 
   
  ‘அமைச்சர்கள் அனைவரும் தங்களது பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததார்களிடம் இருந்து இடைவெளியை பின்பற்றுவது அவசியம். ரூ.5 ஆயிரத்துக்கு மேலான மதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாக வாங்கக்கூடாது. 
  உயர்தரமிக்க ஓட்டல்களிலோ, பார்ட்டிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சொந்தக் காரணங்களுக்கோ அல்லது அரசுப் பணி காரணமாகவோ வெளியூர் செல்லும்போது, அங்குள்ள அரசு விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும்’ என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.
  Next Story
  ×