என் மலர்

    செய்திகள்

    ஜீப்பில் கட்டி வைத்து வாலிபரை மனித கேடயமாக்கிய ராணுவ வீரர்கள் மீது வழக்கு
    X

    ஜீப்பில் கட்டி வைத்து வாலிபரை மனித கேடயமாக்கிய ராணுவ வீரர்கள் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் மாநிலத்தில் ஜீப்பில் கட்டி வைத்து வாலிபரை மனித கேடயமாக்கிய ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் மீது கல் வீசும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு ஸ்ரீநகர் பாராளுமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த படையினர் மீது அதிக அளவில் தாக்குதல் நடந்தன.

    கடந்த 9-ந் தேதி வாக்குப்பதிவின் போது பீர்வா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற போது அவர்களையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் இருந்து தப்பிப்பதற்காக வாலிபர் ஒருவரை பிடித்து ஜீப்பின் முன் பகுதியில் கட்டி வைத்தபடி ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அதாவது அந்த வாலிபரை மனித கேடயமாக அவர்கள் பயன்படுத்தினார்கள்.

    இந்த காட்சிகளை யாரோ படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ராணுவத்தினரை கண்டித்தனர்.

    இது சம்பந்தமாக ராணுவ தளபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலை சந்தித்து விளக்கம் அளித்தார்.



    இந்த நிலையில் வாலிபரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவ வீரர்கள் மீது பீர்வா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தண்டனை வழங்குதல், கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அடையாளம் தெரியாத ராணுவ வீரர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
    Next Story
    ×