என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தல்: ராகுல்காந்தி தேர்வாகிறார்
  X

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தல்: ராகுல்காந்தி தேர்வாகிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 15-ந்தேதி தேர்தலில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

  புதுடெல்லி:

  தேர்தல் ஆணையம் விதிப் படி ஒவ்வொரு கட்சியும் உள்கட்சி தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.

  காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 3 முறை கால அவகாசம் கேட்டு இருந்தது. டிசம்பர் 31-ந்தேதிக்குள் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்.

  இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை அந்த கட்சியின் தேர்தல் குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 அல்லது அக்டோபர் 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெறும். இந்த இரண்டு தேதிகளில் ஒன்றில் தேர்தல் நடைபெறும்.

  காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர் தற்போது கட்சி துணைத் தலைவராக இருக்கிறார்.

  காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் விரைவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்யப்படுவது பற்றி முடிவு செய்யப்படும்.


  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி இது பற்றி கூறும்போது, காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க இதுவே சரியான நேரம் என்றார். ஆனால் இதுகுறித்து கட்சி தலைவரான சோனியா காந்தி தான். இறுதி முடிவு எடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

  சோனியா உடல்நலம் கருதி ராகுல்காந்தி தான் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

  Next Story
  ×