என் மலர்
செய்திகள்

டெல்லி பா.ஜ.க.வில் அதிருப்தி நிர்வாகிகள் 21 பேர் திடீர் நீக்கம்
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தியாளர்கள் 21 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லியில் ஏப்ரல் 23-ம் தேதி 272 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் 160 வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தென் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக பாஜக 58 வேட்பாளர்களும், வட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக 67 வேட்பாளர்களும் மற்றும் கிழக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக 35 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தியாளர்கள் 21 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாக கூறி இந்த நடவடிக்கையை டெல்லி பா.ஜ.க. எடுத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. சார்பில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் டெல்லி ராஜோரி கார்டன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்து பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.

Next Story