என் மலர்
செய்திகள்

சிக்கிம் இடைத்தேர்தல்: ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வெற்றி
சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற அப்பர் பர்துக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
காங்டாக்:
சிக்கிம் மாநிலம் பர்துக் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பிரேம் சிங் தமாங், நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து கடந்த 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட டில்லி ராம் தாபா, பா.ஜ.க. வேட்பாளர் சுரேஷ் கனல் சர்மா ஆகியோரிடையே நேரடி போட்டி இருந்தது.
இந்த தொகுதியில் மொத்தம் உள்ள வாக்காளர்கள் 13591 ஆகும். இதில், 9427 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் தாபா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் குறைந்த வாக்குகளே பெற்றார்.
இறுதியில் சிக்கிம் ஜனநாயக முன்னணி வேட்பாளர் தாபா 8032 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 8406 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் 374 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சுமித்ரா ராய் 98 வாக்குகளும் பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் 449 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 100 வாக்குகள் விழுந்துள்ளன.

Next Story