என் மலர்

    செய்திகள்

    படுக்கை அறை காட்சியை இன்டர்நெட்டில் பரப்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
    X

    படுக்கை அறை காட்சியை இன்டர்நெட்டில் பரப்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் படுக்கை அறை காட்சியை இன்டர்நெட்டில் பரப்பிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் என்ஜினீயர் ஒருவரின் நெருங்கிய நண்பர் கேரளாவில் வசித்து வருகிறார்.

    அந்த நண்பர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் என்ஜினீயரை தொடர்பு கொண்டு, அவரது ஆபாச படம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், உடனே இதுபற்றி விசாரிக்கும் படியும் எச்சரித்தார்.

    நண்பர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் என்ஜினீயர், அந்த ஆபாச படத்தை பார்த்தபோது அதில் இருந்தது அவரது கணவர் என்பதும், அந்த படம் எடுக்கப்பட்ட இடம் அவர்களின் வீட்டின் படுக்கை அறை என்பதையும் கண்டுபிடித்தார்.

    உடனே அந்த பெண் என்ஜினீயர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர்-அவரது கணவர் இடையேயான ஆபாச காட்சியை பதிவு செய்து நெட்டில் பரவ விட்டது யார்? என்பது பற்றி விசாரித்தனர்.

    இதில் அந்த காட்சிகள் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் ஐ.பி. விலாசத்தில் இருந்து அப்லோடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஐதராபாத் போலீசார் திருச்சூர் சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், அந்த படங்களை ஐதராபாத்தில் உள்ள செக்ஸ் இணையதளத்தில் பார்த்ததாகவும், அந்த படங்களை டவுன்லோடு செய்து, நெட்டில் அப்லோடு செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஐதராபாத்தில் இக்காட்சியை வெளியிட்ட விலாசத்தை போலீசார் தேடினர். அந்த விலாசம் புகார் செய்த பெண்ணின் கணவருடையது என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கடந்த 7-ந்தேதி பிடித்து விசாரித்தனர்.

    பிடிபட்ட அவரும் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். மனைவியுடன் படுக்கை அறையில் உல்லாசமாக இருக்கும்போது மனைவிக்கு தெரியாமல் தனது லேப்-டாப்பில் படுக்கை அறை காட்சிகளை பதிவு செய்து, பின்னர் அதனை தனக்கென உருவாக்கி வைத்துள்ள செக்ஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக பணம் பெற்றுக் கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து பெண்ணின் கணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 509 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×