search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீருக்கு அடியில் கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க ரெயில் பாதை
    X

    தண்ணீருக்கு அடியில் கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க ரெயில் பாதை

    இந்தியாவில் முதல் முறையாக கங்கை ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.
    கொல்கத்தா:

    இந்தியாவில் பல இடங்களில் ரெயில்வே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு இடத்தில் கூட தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதைகள் அமைக்கப்படவில்லை.

    இந்தியாவில் முதல் முறையாக கங்கை ஆற்றின் குறுக்கே தண்ணீருக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.

    கொல்கத்தாவில் கங்கை ஆற்றை ஹூக்ளி நதி என்று அழைக்கிறார்கள். கொல்கத்தாவை ஒட்டி இந்த ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்கப்படுகிறது.

    கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    அதன்படி கங்கை ஆற்றின் குறுக்கே சுரங்க பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. 520 மீட்டர் நீளத்துக்கு ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து 30 மீட்டருக்கு கீழே இந்த சுரங்க பாதையை அமைக்கின்றனர்.

    இதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவை பணிகளை தொடங்கி உள்ளன. 2 மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பாதை அமைக்கப்பட்டு விட்டால் கொல்கத்தாவில் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் பெருமளவு போக்குவரத்து குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×