search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநகர் தொகுதியில் பரூக்அப்துல்லா முன்னணி
    X

    ஸ்ரீநகர் தொகுதியில் பரூக்அப்துல்லா முன்னணி

    7 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவான ஸ்ரீநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பரூக் அப்துல்லா முன்னணியில் வகித்து வருகிறார். 10.30 மணி நிலவரப்படி அவர் 2031 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணியில் இருந்தார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 9-ந் தேதி நடந்தது. “அப்போது பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பிரிவினைவாதிகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததுடன் ஓட்டுப்பதிவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியானார்கள். வன்முறை காரணமாக ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. 7 சதவீத ஓட்டுகளே பதிவானது. வன்முறை நடந்த 38 வாக்குச் சாவடிகளில் நேற்று முன்தினம் மறு வாக்குப்பதிவு நடந்தது. இதையும் சேர்த்து ஸ்ரீநகரில் மொத்தம் 7.13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    ஸ்ரீநகர் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கான் போட்டியிட்டார்.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஒட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தவிர பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளே அவ்வப்போது ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை வெளியிட்டனர்.


    ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பரூக் அப்துல்லா முன்னணியில் இருந்தார். 10.30 மணி நிலவரப்படி அவர் 2031 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணியில் இருந்தார்.

    நசிர் அகமது கான் - 11,617

    ஸ்ரீநகர் தொகுதியில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.யாக இருந்த தாரிக்கர்ரா பா.ஜனதா கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது.
    Next Story
    ×