search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் வெளியுறவு செயலாளரை சந்திக்கிறார் இந்திய தூதர்
    X

    குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் வெளியுறவு செயலாளரை சந்திக்கிறார் இந்திய தூதர்

    குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் மற்றும் அதிகாரிகளை இந்திய தூதர் சந்தித்து பேச உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு உளவு குற்றச்சாட்டின்பேரில், பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், இருநாட்டு உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குல்பூ‌ஷண் ஜாதவை நாம் திரும்ப கொண்டு வருவதற்கு சாத்தியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு தெரிவித்து உள்ளது. குல்பூ‌ஷண் ஜாதவ் தற்போது எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியாது. ஏனென்றால் பாகிஸ்தான் இதுபற்றி எந்த தகவலும் இந்தியாவிற்கு தெரிவிக்கவில்லை. குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்தியா தரப்பில் பலமுறை விடுக்கப்பட்ட கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா விடுத்த 13 கோரிக்கைகளை பாகிஸ்தான் நிராகரித்து உள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை தெமினா ஜஞ்ஜுவா மற்றும் அதிகாரிகளை இந்திய தூதர் கவுதம் பாம்பாவாலே சந்தித்து பேசுகிறார். அப்போது தூதர்கள் குல்பூஷண் ஜாதவை சந்திப்பது தொடர்பான விவகாரத்தை முன் வைப்பார் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.


    தூதரக உதவிகள் மட்டுமின்றி இந்தியா குல்பூஷண் ஜாதவிற்கு நீதி கிடைக்கவும் தேவையான உதவிகளை செய்ய உள்ளது, அவருடைய குடும்பத்தார் மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றதை நாடவும், நீதி பெறவும் இந்திய அரசு உதவி செய்ய உள்ளது.

    இதற்கிடையே, ஜாதவுக்கு நீதி கிடைக்க இந்தியா முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தெரிவித்தார்.

    Next Story
    ×