என் மலர்

  செய்திகள்

  தமிழ் புத்தாண்டு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து
  X

  தமிழ் புத்தாண்டு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் புத்தாண்டு மற்றும் வைசாகி, விஷூ திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  தமிழ் புத்தாண்டு, விஷூ, பைசாகி, வைசாகாதி, ரொங்காலி பிஹூ மற்றும் நபா பர்ஷா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், ‘புத்தாண்டு பிறப்பு, விஷூ, வைசாகாதி, ரொங்காலி பிஹூ மற்றும் நப பர்ஷா பண்டிகையை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்த விழாக்கள் அனைத்தும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள். மக்களின் மகிழ்ச்சியும் வளமும் செழித்தோங்கும் வகையில் இந்த புத்தாண்டு அமையட்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×