என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி.வரி விதிப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம்
  X

  ஜி.எஸ்.டி.வரி விதிப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும்: ப.சிதம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறிய, நடுத்தர வணிகர்களுக்கு வசதியாக ஜி.எஸ்.டி.வரி விதிப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  மத்திய அரசு நாடு முழு வதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் வகையில் ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது.

  இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

  இதற்கிடையே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 3 மாதத்துக்கு தள்ளிப்போட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-


  மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்துவது சாத்தியமற்றது, நடை முறைக்கு உதவாது.

  ஏனெனில் லட்சக்கணக்கான நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களையுதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டும். அதற்கு கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்பது எனது கருத்து.

  எனவே மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைத்து அக்டோபர் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும்.

  வர்த்தகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தக்கவாறு மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை. அப்போதுதான் இதில் சுமூகமான நடைமுறை உருவாகும்.

  நான் இதில் நடைபெறும் தவறுகள் பற்றி பேச வில்லை. ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்படும் தொடக்க ஆண்டில் சிறிது தவறுகள் கூட நடைபெறாதவாறு கையாள வேண்டும். குறுகிய காலத்தில் அமல் படுத்தும்போது அதை சிறுமைப்படுத்திவிடும்.

  இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

  Next Story
  ×