என் மலர்
செய்திகள்

மம்தா பானர்ஜி தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் பரிசு: பா.ஜ.க. யுவ மோர்சா தலைவர் மிரட்டல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
மேற்கு மாநில முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இந்து மதத்தை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று கடுமையாக சாடினார்.

இதனால் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடந்த சில மாதங்களவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. தக்ஷினேஸ்வரர் கோவிலில் ஆரத்தி எடுக்க மேற்கு வங்க அரசு தடை விதித்ததாக பா.ஜ.க. தரப்பில் விமர்ச்சிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் போலீசார் தடியடி நடத்தியது. முன்னதாக ஊர்வலம் நடத்துவதற்கு சூரி போலீசார் அனுமதி தர மறுத்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்றதால் தடியடி நடத்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர் யோகேஷ் வர்ஷ்னே மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக யோகேஷ் கூறுகையில், “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு, நான் ரூ.11 லட்சம் பரிசாக தருவேன். மம்தா பானர்ஜி சரஸ்வதி பூஜை, ராம் நவமி கண்காட்சிகள், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் ஆகியவற்றை அனுமதிக்கவே மாட்டார். இப்ஃதார் நோன்பு ஏற்பாடு செய்வார். முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே இருப்பார்” என்று தெரிவித்தார்.
மேற்குவங்க முதல்-மந்திரிக்கு பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story