என் மலர்

  செய்திகள்

  மன்னார்காடு அருகே கஞ்சா கடத்திய திருப்பூர் பெண் கைது
  X

  மன்னார்காடு அருகே கஞ்சா கடத்திய திருப்பூர் பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலம் மன்னார்காடு அருகே கஞ்சா கடத்தியதாக திருப்பூர் பெண்ணை போலீசார் கைது செய்து மன்னார்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
  கொழிஞ்சாம்பாறை:

  கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு டி.எஸ்.பி. சிஜூ ஆபிரகாம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

  அப்போது பஸ் நிலையம் அருகே ஒரு பெண் சந்தேகப்படும்படி நின்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

  சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் அவர் திருப்பூர் பஸ் நிலையத்தில் கடை நடத்தி வரும் ராஜேஸ்வரி (வயது 48) என்பது தெரியவந்தது.

  மேலும் அந்த பெண் கூறும் போது கடந்த சில வருடங்களாக கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி வந்து பாலக்காடு, மன்னார்காடு, ஒற்றப்பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து பணம் பெற்று சென்றதாக கூறினார்.

  ராஜேஸ்வரியை கைது செய்த போலீசார் இன்று மன்னார்காடு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
  Next Story
  ×