என் மலர்

  செய்திகள்

  பச்சிளம் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த மர்ம நபர்கள்: ராஜஸ்தானில் பயங்கரம்
  X

  பச்சிளம் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த மர்ம நபர்கள்: ராஜஸ்தானில் பயங்கரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் உயிருடன் அடக்கம் செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- சிகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமு நகரில் நேற்றிரவு மூன்று மர்ம நபர்கள் பச்சிளம் குழந்தையொன்றை ஜீப்பில் கொண்டுவந்து, அப்பகுதியில் உள்ள மறைவான இடமொன்றில் அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

  அந்த குழந்தை பாதி புதைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென அவ்விடத்திற்கு வர மர்ம நபர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் அந்த குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  தற்போது அந்த பெண் குழந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவளது பெற்றோர் யார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×