என் மலர்
செய்திகள்

மன்மோகன் சிங் உதவியால் நிறைவேறிய ஜி.எஸ்.டி மசோதா: காங்கிரஸுக்கு அருண்ஜெட்லி பாராட்டு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உதவியால் மாநிலங்களவையில் இன்று ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் சுமார் 8 மணி நேரம் விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது, மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உதவியால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு தெரிவித்தார். எந்தவொரு தனிப்பட்ட நபரும், கட்சியும் பெருமை கொண்டாட முடியாது என்றார்.
விவாதம் முடிந்து ஓட்டெடுப்பு நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி எதிர்த்து வாக்களிக்கவில்லை.

ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்பாக மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையில் இருப்பதால் அவர்கள் நினைத்தால் மசோதா நிறைவேறுவதை தடுத்திருக்க முடியும். ஆனால் மன்மோகன் சிங் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் ஆதரவு வெற்றிகரமாக ஜி.எஸ்.டி. மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Next Story