என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேசத்தில் வேன்களில் நடமாடும் மதுக்கடைகள் திறப்பு
    X

    மத்தியப்பிரதேசத்தில் வேன்களில் நடமாடும் மதுக்கடைகள் திறப்பு

    மத்தியப்பிரதேசத்தில் நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் வேன்கள் மூலம் நடமாடும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.
    போபால்:

    பா.ஜனதா ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகளை மூட சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாநிலங்களிலும் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக்கடைகள் மூடப்பட்டன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. இதனால் மாநில அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏற்படும் நிதி இழப்பை சமாளிக்க நடமாடும் மதுக்கடைகளை மத்திய பிரதேச மாநில அரசு திறந்து உள்ளது. எங்கெங்கு நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டதோ அந்தப் பகுதியில் நெடுஞ்சாலையையொட்டியுள்ள பகுதிக்குள் இந்த நடமாடும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக விதிஷா மாவட்டத்தில் வேன்களில் நடமாடும் மதுக்கடைகள் செயல்படுகிறது. வேன்களில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிறுத்தி விற்பனை செய்யப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட கலால் துறை அதிகாரி வினோத் காதிகா கூறுகையில், “இந்த நடமாடும் மது கடைகள் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் கடந்து செயல்படுகிறது. வேன்கள் மட்டுமல்லாது ஆட்டோ ரிக்‌ஷாக்கள், மினி வேன்கள் மூலமும் விற்பனை செய்யப்படும். கலால் துறை அதிகாரிகள் இந்த நடமாடும் மதுக்கடைகளை கண்காணிப்பார்கள். மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் இங்கு பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
    Next Story
    ×