என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயாவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்
    X

    மேகாலயாவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்

    மேகாலயா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, 7 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, 7 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

    மேகலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி 7 பேரால் கூட்டாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். 12 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மற்ற இருவரும் கூட்டு பாலியல் பலாத்கார சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அம்மாநிலத்தில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ஈடுபடும் இரண்டாவது கூட்டு கற்பழிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×