என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பிரச்சனைக்காக அங்குள்ள இளைஞர்கள் வாழ்வை பணயம் வைக்கின்றனர் - பரூக் அப்துல்லா
    X

    காஷ்மீர் பிரச்சனைக்காக அங்குள்ள இளைஞர்கள் வாழ்வை பணயம் வைக்கின்றனர் - பரூக் அப்துல்லா

    காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக அங்குள்ள இளைஞர்கள் வாழ்வை பணயம் வைக்கின்றனர் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக அங்குள்ள இளைஞர்கள் வாழ்வை பணயம் வைக்கின்றனர் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் பேசிய பிரதமர் மோடி, கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள், தீவிரவாதத்துக்கு பதிலாக சுற்றுலாவை தேர்வு செய்ய வேண்டும் எனவும், மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளுக்காக பல இளைஞர்கள் கல் உடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சிலர் கல்லெறிந்து கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் பரூக் அப்துல்லா நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,”காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் (கல்லெறிந்து போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள்) தங்களது வாழ்வையே பணயம் வைக்கின்றனர். மாறாக, சுற்றுலாவுக்காக அவர்கள் போராடவில்லை. இதனை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,”அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாதிகளைப் போன்று பரூக் அப்துல்லா பேசி வருகிறார். இதுபோன்று பேச வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×