என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்? வருமான வரித்துறை விளக்கம்
    X

    வருமான வரி தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்? வருமான வரித்துறை விளக்கம்

    வருமான வரி தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
    புதுடெல்லி:

    வருமான வரி தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.

    ‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம் என்று கூறியுள்ளது.

    ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாக கருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமே வருமான வரி தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். 
    Next Story
    ×