என் மலர்

  செய்திகள்

  நடிகை ரோஜாவை பார்த்து சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார்: கம்யூனிஸ்டு தலைவர் கிண்டல்
  X

  நடிகை ரோஜாவை பார்த்து சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார்: கம்யூனிஸ்டு தலைவர் கிண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ரோஜாவை பார்த்து சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் தலைவருமான நாராயணன் கூறியுள்ளார்.
  நகரி:

  ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக நடிகை ரோஜா உள்ளார்.

  இவர் சட்டசபையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் பெண் எம்.எல்.ஏ. அனிதாவை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

  புகார்களின் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி முதல் 1½ வருடத்துக்கு ரோஜா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.

  ‘சஸ்பெண்டு’ முடிந்த நிலையில் ரோஜா கடந்த 6-ந்தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

  இந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ரோஜாவை மேலும் ஒரு ஆண்டு ‘சஸ்பெண்டு’ செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  அதில், அவர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை. எனவே சட்டசபையில் இருந்து அவரை மேலும் ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்டு செய்ய பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் ரோஜாவை பார்த்து சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் தலைவருமான நாராயணன் கூறி உள்ளார்.


  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

  ரோஜாவை பார்த்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார். அவரை கண்டதும் சந்திரபாபு நாயுடுவுக்கு நடுக்கம் ஏற்பட்டு விடுகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு தரப்படுவதில்லை.

  எதிர்க்கட்சிகளின் குரல் மக்களின் குரல். அவர்களின் குறைகள், கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் தான் பிரதிபலிக்கும்.

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் ஒரே மாதிரிதான் ஆட்சி நடத்துகிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×