search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் 3-வது நாளான நேற்று விவசாயிகள் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். ஆதிவாசிகளைப் போல இடுப்பில் இலைதழைகளை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதற்கிடையே, போராட்டக்காரர்களில் சிலர் தீக்குளிக்கப்போவதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் அய்யாக்கண்ணு உள்பட 6 பேரை போலீஸ் உதவி கமிஷனர் வேத் புஷ் மத்திய வேளாண்துறை அமைச்சகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்களிடம் அதிகாரிகள் கூறினார்கள்.

    அதன்பிறகு விவசாயிகள் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சின்னசாமி (வயது 58), ராமசாமி (66), ராமலிங்கம் (48), சதாசிவம் (63) ஆகிய 4 விவசாயிகள் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, நேற்று போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு அவர்களுடைய கோரிக்கைகள் பற்றி மத்திய மந்திரிகளிடம் பேசுவதாக உறுதி அளித்தார். 
    Next Story
    ×