என் மலர்
செய்திகள்

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் அமரீந்தர் சிங்
பஞ்சாப் மாநிலத்தின் முதல்மந்திரியாக அமரீந்தர் சிங் பதவியேற்றார். அவருடன் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சண்டிகர்:
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் முதல்மந்திரி வேட்பாளராக தேர்தலுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங், முறைப்படி சட்டசபை காங்கிரஸ் தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இன்று நடைபெற்ற விழாவில் அமரீந்தர் சிங் இரண்டாம் முறையாக பஞ்சாப் முதல்மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வி.பி. சிங் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிராமாணம் செய்து வைத்தார். அம்ரீந்தர் சிங் உடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story