என் மலர்

  செய்திகள்

  தேர்தல் சாதனை: உ.பி.யில் 40 பெண் வேட்பாளர்கள் வெற்றி
  X

  தேர்தல் சாதனை: உ.பி.யில் 40 பெண் வேட்பாளர்கள் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலத்தில் இது வரை இல்லாத வகையில், இந்த முறை அதிகபட்சமாக 40 பெண்கள் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  லக்னோ:

  உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க. 312 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது.

  இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகள் சார்பாகவும் 96 பெண்கள் போட்டியிட்டுள்ளதாகவும், அதில் 40 பேர் வெற்றி பெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.  இதில், பா.ஜ.க-அப்னா தளம் கூட்டணியிலிருந்து 35 பெண்களும், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து 2 பெண்களும், காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 பெண்களும் சமாஜ்வாடி கட்சியிலிருந்து 1 பெண்ணும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக பா.ஜ.க கட்சி 43 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

  இதன்மூலம், உ.பி. சட்டமன்ற வரலாற்றில் இந்த முறை அதிக அளவிலான பெண்கள் உறுப்பினராகி உள்ளனர். கடந்த தேர்தலில் 35 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
  Next Story
  ×