என் மலர்

  செய்திகள்

  அமித் ஷா, வெங்கையா நாயுடு பயணம் செய்த விமானத்தில் எஞ்சின் கோளாறு
  X

  அமித் ஷா, வெங்கையா நாயுடு பயணம் செய்த விமானத்தில் எஞ்சின் கோளாறு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிப்பூர் முதல்மந்திரி பிரேன்சிங் பதவியேற்பு விழாவுக்கு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக உடனடியாக டெல்லி திரும்ப நேரிட்டது.
  புதுடெல்லி:

  மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைக்க இருக்கிறது. பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரியாக பிரேன் சிங் இன்று பதவியேற்க உள்ளார்.

  இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோர் பிரேன் சிங் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானத்தில் ஷில்லாங் புறப்பட்டுச் சென்றனர். நடு வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென விமான எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட்டுகள் கண்டறிந்தனர். இதனால், மணிப்பூர் பயணத்தை ரத்து செய்து அவசர அவசரமாக அவர்கள் டெல்லி திரும்பினர்.  

  தொழில்நுட்ப கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×