என் மலர்

    செய்திகள்

    5 மாநில தேர்தலில் அபார சாதனை: மேஜைகள் ஒலிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு
    X

    5 மாநில தேர்தலில் அபார சாதனை: மேஜைகள் ஒலிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வரலாற்று சாதனையாக உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில தேர்தலில் வெற்றிபெற்று அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு களம் அமைத்துதந்த பிரதமர் மோடிக்கு பாராளுமன்றத்தில் மேஜைகள் ஒலிக்க இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்த பா.ஜ.க., உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது.

    குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், ஐந்து மாநிலங்களில் ஓயாமல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த அவரது உழைப்பும்தான் மூலக்காரணம் என நம்பப்படுகிறது.



    இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இன்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்றபோது பிரதமர் மோடி அவைக்குள் நுழைந்தார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் மேஜைகளை பலமாக தட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    Next Story
    ×