search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நிலைகுலைந்து விபத்து - விமானிகள் உயிர் தப்பினர்
    X

    இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நிலைகுலைந்து விபத்து - விமானிகள் உயிர் தப்பினர்

    அலகாபாத் நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியின் போது நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பாம்ராவுலி என்ற இடத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கு உள்ள ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களில் வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இன்று காலை அதேபோல் பறந்து சென்று பயிற்சி மேற்கொண்ட இரு வீரர்கள் தங்களது ஹெலிகாப்டரை சரிசமமாக இலாத இடத்தில் தரையிறக்க முயன்றனர்.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்  தீடீரென வேகமாக தரையில் மோதி நிலைகுலைந்து சரிந்தது. அதிர்ஷ்டவசமாக இரு வீரர்களும் அவசர கதவின் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் ஹெலிகாப்டர் சேதமடைந்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×