search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர்கள் ஊடுருவல்: பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு படை உஷார் நிலை
    X

    மர்ம நபர்கள் ஊடுருவல்: பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு படை உஷார் நிலை

    பதான்கோட் விமானப்படை தளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
    பதான்கோட்:

    பதான்கோட் விமானப்படை தளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த வருடம் ஜனவரி 2–ந் தேதி ஊடுருவினர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, நமது பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது.

    பதான்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதலானது, பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை இந்தியா ஒப்படைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படை மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் தாக்குதலுக்கு இலக்கான பதான்கோட் விமானப்படை தளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் பதான்கோட் விமானப்படை தளத்தினுள் மர்ம நபர்கள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு படை உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படை தளம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பதான்கோட் பிராந்திய சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு நிலாம்ப்ரி விஜய் கூறுகையில், “தேசவிரோத சக்திகள் ஊடுருவியிருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளோம். அருகில் உள்ள கிராமங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. விமானப்படை தளத்திற்கு மேற்பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.” என கூறியுள்ளார்.
    Next Story
    ×