என் மலர்

  செய்திகள்

  கடும் பனிப்பொழிவு: காஷ்மீரில் சிக்கித்தவித்த 530 பயணிகள் மீட்பு
  X

  கடும் பனிப்பொழிவு: காஷ்மீரில் சிக்கித்தவித்த 530 பயணிகள் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடும் பனிப்பொழிவால் காஷ்மீரில் சிக்கித்தவித்த 530 பயணிகளை இந்திய விமானப்படை மீட்டுள்ளது.
  ஜம்மு:

  காஷ்மீரில் கடந்த 7 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் 300 கிலோமீட்டர் நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், பனிப்பொழிவால் காஷ்மீரில் சிக்கித்தவித்த 530 பயணிகளை இந்திய விமானப்படை மீட்டுள்ளது.

  சுமார் 830-க்கும் அதிகமான பயணிகள் ஜம்மு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து வசதியின்றி தவித்துக் கொண்டிருந்தனர். இதனையறிந்த இந்திய விமானப்படை 17 பேருந்துகள் மூலம் அவர்களை தங்களது நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதில் 530 பேரை விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு இந்திய விமானப்படை அழைத்து சென்றுள்ளது.

  Next Story
  ×