search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு துறை மந்திரியின் பொறுப்புகளை கூடுதலாக நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏற்றார்
    X

    பாதுகாப்பு துறை மந்திரியின் பொறுப்புகளை கூடுதலாக நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏற்றார்

    பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மானோகர் பாரிக்கர் ராஜினாமா செய்ததையடுத்து அத்துறையை கூடுதல் பொறுப்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று ஏற்றுக் கொண்டார்.
    புதுடெல்லி:

    கோவா முதல்மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாதுகாப்பு துறை மந்திரியாக பொறுப்பேற்றிருந்தார். இதையடுத்து, நடந்து முடிந்த கோவா மாநில சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் உதவியுடன் பா.ஜ.க ஆட்சியமைக்க இருக்கின்றது. பா.ஜ.க சார்பில் மனோகர் பாரிக்கர் முதல்மந்திரியாக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அதனால், அவர் பாதுகாப்பு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, மனோகர் பாரிக்கர் நிர்வகித்து வந்த பாதுகாப்பு துறையை, நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில்,அருண் ஜெட்லி பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக இன்று ஏற்றுக் கொண்டார். பாதுகாப்பு துறை மந்திரியின் அறைக்குச் சென்ற அவர் சில கோப்புகளில் கையெழுத்திட்டார்.

    ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும் அருண் ஜெட்லி நிதி மற்றும் பாதுகாப்பு என இரண்டு அமைச்சகங்களையும் நிர்வகித்து வந்தார். பின்னர், பாதுகாப்பு துறை மந்திரியாக மனோகர் பாரிக்கர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×