என் மலர்

  செய்திகள்

  வாசனை தைலம் நிரம்பிய தொட்டியில் பாதுகாக்கப்படும் வடகொரிய அதிபர் சகோதரரின் உடல்
  X

  வாசனை தைலம் நிரம்பிய தொட்டியில் பாதுகாக்கப்படும் வடகொரிய அதிபர் சகோதரரின் உடல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வட கொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நாம்-ன் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொள்ளும் வரை வாசனை தைலம் நிரம்பிய தொட்டியில் வைத்து பாதுகாக்கப்படுவதாக மலேசிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
  கோலாலம்பூர்:

  வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம். இவர் கடந்த மாதம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

  இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு 2 பெண்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்தது.

  அதேசமயம், வடகொரியாவின் விசாரணையில் கண்டுபிடித்ததை வடகொரியா ஏற்க மறுத்துள்ளது. அதாவது, கிம் ஜாங்-நாம் மலேசியாவில் இறந்தபோது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டில் கிம் சோல் என்ற பெயர் இருந்தது. எனவே, கிம் சோல், கிம் ஜாங் நாம் இருவரும் ஒரே நபர்தான் என்று மலேசிய காவல்துறை உறுதி செய்தது. அவரை கிம் சோல் என்று அழைப்பதை ஏற்க மறுத்த வடகொரியா, கிம் ஜாங் நாம் உடலை திரும்ப ஒப்படைக்கும்படி கூறியுள்ளது.

  வடகொரியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் மலேசியாவில் கிம் ஜாங் நாம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையையும் வடகொரியா நிராகரித்தது.


  மலேசிய துணை பிரதமர் அஹமது ஷாஹித் ஹமிடி

  இந்நிலையில், கிம்மின் உடலை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யும் முன் அவரது உறவினர்கள் பெறுவதற்காக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அவகாசம் வழங்க மலேசியா முடிவு செய்தது. அதற்கேற்ப கிம்மின் உடலை வாசனை தைலங்கள் நிரம்பிய தொட்டியில் வைத்து  பாதுகாக்கப் படுவதாக மலேசிய துணை பிரதமர் அஹமது ஷாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.

  மேலும், பணி ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் மலேசியாவில் வசித்து வரும் 50 வட கொரியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
  Next Story
  ×