என் மலர்

  செய்திகள்

  கோவாவில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க -  ஆளுநரை சந்தித்தார் மனோகர் பாரிக்கர்
  X

  கோவாவில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க - ஆளுநரை சந்தித்தார் மனோகர் பாரிக்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது. 22 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்துடன் மனோகர் பாரிக்கர் அம்மாநில ஆளுநரை இன்று சந்தித்தார்.
  பணாஜி:

  ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உ.பி. மற்றும் உத்தரகாண்டில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், கோவாவில் ஆட்சியை பறிகொடுத்தது. முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மட்டுமின்றி அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர்களும் தோல்வியைத் தழுவினர்.

  40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 2012ல் நடந்த தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. இந்தமுறை 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

  சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில்,  மராட்டிய கோமன்டக் கட்சியின் 3 எம்.எல்.ஏ-க்கள், கோவா முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சுயேட்சைகள் 3 பேர் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.  இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்மந்திரியாக பொறுப்பேற்க இருக்கிறார். கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா-வை இன்று சந்தித்த பாரிக்கர் தனது ஆதரவு 22 எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கினார்.
   
  கோவா மாநில முதல்மந்திரியாக பொறுப்பேற்க உள்ள மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை மந்திரி பொறுப்பில் இருந்து கூடிய விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×