என் மலர்

    செய்திகள்

    பஞ்சாப் தேர்தலில் 81 பெண்கள் போட்டியிட்டு 6 பேர் மட்டுமே வெற்றி
    X

    பஞ்சாப் தேர்தலில் 81 பெண்கள் போட்டியிட்டு 6 பேர் மட்டுமே வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 81 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
    அமிர்தசரஸ்:

    ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை
    இழந்துள்ளது.

    மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 தொகுதிகளை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், ஒட்டு மொத்தமாக 81 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, பஞ்சாப் சட்டசபையில் இம்முறை பெண்களின் பிரதிநித்துவம் வெறும் 5% மட்டுமே.



    வெற்றி பெற்றுள்ள 6 பெண்களில் மூவர் ஆம் ஆத்மி கட்சியையும், மூவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஆவர். கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 93 பெண்கள் போட்டியிட்டு 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புச்சா மாண்டி தொகுதியில் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர்  தோல்வியை தழுவியுள்ளார்.
    Next Story
    ×