என் மலர்
செய்திகள்

கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு காட்டுப்பகுதியில் மீட்பு: 3 பேர் கைது
குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசும், சான்றிதழும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி:
குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்திக்கு 2014-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுடன் இந்த பரிசை பகிர்ந்துகொண்டார். கடந்த மாதம் 6-ந் தேதி தெற்கு டெல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நோபல் பரிசு, சான்றிதழ் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டன. இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்தார்.

போலீசார் சில நாட்களில் இந்த திருட்டு தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். ஆனால் அவர்கள் நோபல் பரிசு தேவையில்லாத பொருள் என கருதி அதனை ஒரு பையில் வைத்து ஒரு காட்டுப்பகுதியில் வீசிவிட்டனர். போலீசார் அதனை தேடிவந்தனர். 15 பேர் குழுவினர் நேற்று சங்கம் விஹார் காட்டுப்பகுதியில் தேடியபோது அந்த நோபல் பரிசும், சான்றிதழும் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை போலீசார் கைலாஷ் சத்யார்த்தியிடம் ஒப்படைத்தனர். இதற்காக போலீசாருக்கு அவர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

Next Story