என் மலர்

  செய்திகள்

  பெங்களூருவில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி சூப்பர்வைசர் கைது
  X

  பெங்களூருவில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி சூப்பர்வைசர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூருவில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர்.
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிளாந்தர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 3½வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரை கழிவறைக்கு அழைத்து சென்று பள்ளி சூப்பர்வைசர் மஞ்சுநாத் பாலியல் கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.

  அந்த சிறுமி அழுது கொண்டே இருந்தாள். பள்ளிக்கு செல்லவும் மறுத்து விட்டாள். அதன் பிறகு அந்த சிறுமிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு தான் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை மழலை மொழியில் தனது தாயாரிடம் கூறினார்.

  பள்ளி சூப்பர்வைசர் தன் உடலில் கையை வைத்து சில்மிசம் செய்ததாகவும், நான் அழுததால் என்னை தாக்கியதாகவும் அந்த சிறுமி கூறினாள்.

  பின்னர் சிறுமியின் பெற்றோர் அந்த தனியார் பள்ளியில் டைரக்டரிடம் முறையிட்டனர். இந்த தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மஞ்சுநாத்துக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

  இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி சூப்பர்வைசர் மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
  Next Story
  ×