என் மலர்

  செய்திகள்

  வங்கிகளில் வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  X

  வங்கிகளில் வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து வங்கிகளில் வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
  புதுடெல்லி:

  பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் பணம் போட, எடுக்க கட்டுப்பாடு விதித்ததால் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

  அதன்பிறகு புதிதாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் பணப்புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து ரிசர்வ் வங்கி பணம் எடுக்க பணம் போடுவதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக விலக்கி வருகிறது.

  அதன்படி ரிசர்வ் வங்கி கடந்த 8-ந்தேதி வெளியிட்ட அறிவிக்கையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்று இருந்த கட்டுப்பாடு பிப்ரவரி 20-ந்தேதி முதல் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்றும், மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  இந்த அறிவிப்பின் படி நேற்று முதல் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது. வங்கிகளிலோ, ஏ.டி.எம். எந்திரங்களிலோ எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு தனியார் வங்கியில் நேற்று காலை 10.45 மணிக்கு பணம் எடுக்க சென்ற போது ரூ.50 ஆயிரம் வழங்க மறுத்துவிட்டதாகவும், வங்கிக்கு இன்னும் அது தொடர்பான உத்தரவு தகவல் (மெயில்) வரவில்லை என்றும் தெரிவித்ததாக வாடிக்கையாளர் புகார் கூறினார்.

  வங்கியில் ரூ.50 ஆயிரம் வழங்க மறுத்ததால் ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுத்து ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவித்தார்.
  Next Story
  ×