என் மலர்

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 2-வது முறையாக கணவரை எதிர்த்து மனைவி போட்டி
    X

    உத்தரபிரதேசத்தில் 2-வது முறையாக கணவரை எதிர்த்து மனைவி போட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரபிரதேசத்தில் 2-வது முறையாக கணவரை எதிர்த்து மனைவி போட்டியிடுகிறார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஷாரன்பூர் மாவட்டம் தியோபாண்ட் தொகுதியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ.வான மாவியா அலி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இங்கு அவரை எதிர்த்து மனைவி ஜாகீர் பாத்திமா சுயேச்சையாக போட்டியிடுகிறார். கணவரை எதிர்த்து ஜாகீர் பாத்திமா தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

    ஏற்கனவே 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மாவியா அலி போட்டியிட்ட போது அவரை எதிர்த்து ஜாகீர் பாத்திமா சுயேச்சையாக களத்தில் நின்றார். அப்போது ஜாகீர் பாத்திமாவுக்கு 455 வாக்குகளே கிடைத்தது. மாவியா அலி 51,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    Next Story
    ×