என் மலர்

  செய்திகள்

  வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் விதிமுறை மீறலாகும்: தேர்தல் கமிஷன்
  X

  வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் விதிமுறை மீறலாகும்: தேர்தல் கமிஷன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்குப்பதிவுக்கு பின்னர் ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் தேர்தல்கால விதிமுறை மீறலாகும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒருகட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி நடந்து முடிந்த நிலையில் பிரபல இந்தி செய்தி ஊடகம் ஒன்று, ஓட்டுப்பதிவுக்கு பின்னர் வாக்காளர்களை பேட்டி கண்டு யாருக்கு வாக்களித்தார்கள்? என்ற அடிப்படையில் வெற்றி-தோல்வி யாருக்கு? என்ற அடிப்படையில் கருத்து கணிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

  இன்னும் ஆறுகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற யூக கணிப்புகளை வெளியிட்டால் அதன் பாதிப்பு அடுத்தகட்ட வாக்குப்பதிவுகளில் எதிரொலிக்கும் என ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இந்நிலையில், அந்த ஊடகத்தின் அத்துமீறல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக விசாரணை நடத்தியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126 அ மற்றும் ஆ ஆகிய ஷரத்துகளை இந்த செயல்பாடு மீறுவதாக குற்றம்சாட்டியுள்ள தேசிய தேர்தல் ஆணையம், இந்திய தண்டனை சட்டம் 188-ஐயும் இதுபோன்ற செயல்பாடுகள் மீறுவதாக குறிப்பிட்டுள்ளது.

  வேறுகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ள நிலையில் ஒருகட்ட அல்லது அடுத்தகட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் தேர்தல்கால விதிமுறை மீறலாகும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  மேலும், தேர்தல் கமிஷனின் ஒழுங்குமுறையை கடைபிடிக்காத அந்த ஊடகத்தின் செய்தி மற்றும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரப்பிரதேசம் மாநில தேர்தல் கமிஷனுக்கு தேசிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  Next Story
  ×