என் மலர்

  செய்திகள்

  கோடாரியால் பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்
  X

  கோடாரியால் பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் தனது தாயை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் கால்மண்டா கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான பென்மணி இன்று மாலை அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் துலிசந்த் என்பவர், தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, துலிசந்த் தான் மறைத்து எடுத்து வந்த கோடாரியால் தனது தாயின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார்.

  மகனின் இந்த கோர தாக்குதலில் அந்தத் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொன்ற கொலைகார மகன் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டான். கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  துலிசந்த் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
  Next Story
  ×