என் மலர்

    செய்திகள்

    காஷ்மீரில் ஊடுருவல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் ஊடுருவல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடுவதை எல்லைப்பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகிறார்கள்

    இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீரின் யாரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவலில் ஈடுபட்டனர். இதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து தீவிரவாதிகளை முற்றுகையிட்டனர். கூடுதலாக அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினரும் விரைந்தனர்.

    எல்லையில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி கடுமையான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் பின்வாங்கி தப்பிச் சென்றுவிட்டனர்.
    Next Story
    ×