search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: முதல் கட்ட தேர்தலில் 63 % வாக்குப்பதிவு
    X

    உ.பி: முதல் கட்ட தேர்தலில் 63 % வாக்குப்பதிவு

    உத்தரப்பிரதேச சட்டசபைக்கான இன்று நடந்த முதல் கட்ட தேர்தலில் 63 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றாலும், பிற்பகலுக்குப் பின்னர் வாக்குப் பதிவு மந்தமாக நடைபெற்றது.

    இறுதியாக வாக்குப்பதிவு முடிவுற்று, ஒட்டு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மொத்தமாக 63 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 3888 வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலமாக கன்காணிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2,26,906 பேர் மாநிலம் முழுவதும் பிரச்சனைக்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அப்புறப்படுத்த பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த கட்டமாக 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    Next Story
    ×