search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி
    X

    கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி. 87 வயதான இவர், குளிர் தொடர்பான சுகாதார பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக, குளிர்காலத்தின்போது டெல்லியில் வந்து தங்குவது வழக்கம். ஆனால், இந்த குளிர்காலத்தில் அவர் காஷ்மீரிலேயே தங்கியிருந்தார்.

    இந்நிலையில், நேற்று இரவு அவர் தனக்கு படபடப்பாக வருவதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக அவரை எஸ்.கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்தாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×