search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர் - வீடியோ இணைப்பு
    X

    பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர் - வீடியோ இணைப்பு

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 11-ந் தேதி நடைபெறுகிறது. 

    முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் பிளவு உருவானது. இதை ஈடு செய்ய காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள புலந்த்ஷல் பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி வேட்பாளர் சுஜட் அலம். அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஹஜி அலீமுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். 

    அப்போது திடீரென பிரச்சார மேடையில் சுஜட் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென ”தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்” என்று கூறிக் கொண்டே அடித்துக் கொண்டார்.
     
    இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாடி கட்சி சார்பில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்பட வில்லை. முன்னதாக ஏற்கனவே இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுஜட் தோல்வி அடைந்திருந்தார்.
    Next Story
    ×