search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
    X

    நாட்டு நாய்கள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்

    ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நாட்டு நாய்கள் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சென்னை சைதாப்பேட்டையில் நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை தமிழக கால்நடைத்துறை 1980-ல் இருந்து நடத்தி வருகிறது.

    2013-ம் ஆண்டு இங்கு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் செய்தனர்.

    இதை அடிப்படையாக வைத்து இந்த மையத்தை மூட வேண்டும் என பீட்டா அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதைபோன்று நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தை 2 மாதங்களில் மூட வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தற்போது தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. நாட்டு நாய்கள் இன விருத்தி மையத்தில் அனைத்து விதிகளும் பின்பற்றப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×