என் மலர்
செய்திகள்

மூளையில் கட்டி இருப்பதாக நாடகம் ஆடி திருமணத்தை நிறுத்திய மணமகன் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் மூளையில் கட்டி இருப்பதாக நாடகம் ஆடி திருமணத்தை நிறுத்திய மணமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:
பெங்களூரு மாநகர், கவுடன பாளையா பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகன் ரங்கநாத். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
ரங்கநாத்திற்கும், சிக்கல சந்திரா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இருவரது குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள் கூடி திருமணம் நிச்சயித்தார்கள். இந்த இளம்பெண்ணும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவர்களது திருமண விழாவை வருகிற 3-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு, பெண் வீட்டார் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தது. திருமணத்திற்கு 5 நாட்களே உள்ள நிலையில் திடீரென்று மணமகன் ரங்கநாத், கடந்த 24-ந் தேதி தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து ‘தனக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் (பிரெயின் ட்யூமர்) ஆகையால் இந்த திருமணம் வேண்டாம், ஏற்பாடுகளை நிறுத்தி விடுங்கள்’ என்று கூறினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கண்ணீரும், கம்பலையுமாக நீங்கள் தற்போது எங்கிருந்து பேசுகிறீர்கள், நானே நேரில் வருகிறேன். விரிவாக பேசலாம் என்று ரங்கநாத்திடம் கேட்டு உள்ளார். அதற்கு ரங்கநாத் மறுப்பு தெரிவித்து, ‘‘எனது டாக்டர் நண்பர் ஒருவரே, என்னை பரிசோதித்து மூளையில் கட்டி இருப்பதை உறுதி செய்து உள்ளார். ஆதலால் நமக்கு இந்த திருமணம் சாத்தியமில்லை. என்னை மறந்து விடு’’ என்று டயலாக் பேசி, ரங்கநாத் போனை துண்டித்து விட்டாராம்.
ஆனால் ரங்கநாத் எதையோ மறைக்கிறார், நாடகமாடுகிறார் என்று சந்தேகம் கொண்ட அந்த மணப்பெண் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினரும், உடனடியாக ரங்கநாத் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது பெற்றோரிடம் பேசியபோது, எங்கள் மகனுக்கு விருப்பம் இல்லாத இந்த திருமணத்தில் எங்களுக்கும் விருப்பம் இல்லை என்று மறுத்து விட்டனராம்.
இதையடுத்து மணப்பெண்னின் குடும்பத்தினர், மணப்பெண்ணை அழைத்து சென்று சுப்பிரமணியபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரங்கநாத் மற்றும் அவரது தந்தை வரதராஜன், தாய் ஜெயம்மா, உறவினர் ரவி மற்றும் அவரது மனைவி சியாமளா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ‘‘மணப்பெண்ணிடம் தனக்கு மூளையில் கட்டி இருப்பதாக பொய் சொன்ன ரங்கநாத், போலீசாரிடம் வேறு மாதிரியான காரணங்களை சொல்லி உள்ளார். அதாவது, திருமணத்திற்கு பிறகு வேறு வீடு பார்த்து, நாம் தனிக்குடித்தனம் போகலாம் என்று மணப்பெண், ரங்கநாத்தை வற்புறுத்தினராம். திருமணத்திற்கு முன்பே, குடும்பத்தில் இருந்து தன்னை பிரிக்க நினைக்கும் அந்த பெண்ணை திருமணம் முடித்தால், இனி வரும் நாட்களில் எப்படியெல்லாம் தொல்லை கொடுப்பாரோ? என்ற காரணத்தினால் தான் இந்த திருமணத்தை நிராகரித்தேன். என்னை சிறையில் அடைத்தாலும் சரி, ஆனால் இந்த திருமணத்திற்கு மட்டும் சம்மதிக்கவே மாட்டேன் என்று ரங்கநாத் உறுதியாக போலீசாரிடம் கூறிவிட்டதாக, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Next Story